அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம்

எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்து உள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு தொடர்பாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் சீன அதிபர்ஜிஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் தொலை பேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
சீன அதிபர் ஜி ஜின்பிங் கிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. உக்ரைன்- ரஷியா போர், சோயாபீன்ஸ் மற்றும் பிற பண்ணை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதித்தோம்.
எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்து உள்ளோம். அது இன்னும் சிறப்பாக இருக்கும். சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது. 3 வாரங்களுக்கு முன்பு தென் கொரியாவில் நடந்த எங்கள் மிகவும் வெற்றிகர சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த அழைப்பு இருந்தது.எங்கள் ஒப்பந்தங்களை துல்லியமாக வைத்திருப்பதில் இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு வருகை தருமாறு அதிபர் ஜின்பிங் என்னை அழைத்தார், அதை நான் ஏற்றுக் கொண் டேன்.எனது அழைப்பை ஏற்று சீன அதிபர் அதிபர் ஜி ஜின் ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்கா வர உள்ளார். அடிக்கடி தொடர்பு கொள்வது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். அதைச் செய்ய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






