இங்கிலாந்தில் மீட்பு பணிக்காக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம்

காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஆளில்லா ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
லண்டன்,
இங்கிலாந்து கடற்படையில் முதன்முறையாக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடல் மற்றும் வனப்பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இது சுமார் 12 மணி நேரம் வரை தொடர்ந்து வானில் பறக்கும். தற்போது மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை மட்டுமே பறக்கும். எனவே காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும் என இங்கிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story