மத்திய மந்திரி பியூஷ் கோயல் இஸ்ரேல் பயணம்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சந்திப்பு

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ளார்
ஜெருசலேம்,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு வர்த்தகம், வேளாண்மை, தொழில்துறை என பல்வேறு துறை மந்திரிகளை சந்தித்தார். மேலும், இந்தியா , இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் பியூஷ் கோயல் ஈடுபட்டார்.
இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வர்த்தக ஒப்பந்தம், முதலீடு, இருநாட்டு உறவு , தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
Related Tags :
Next Story






