உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - புதின்


உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - புதின்
x

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் அத்தியாவசியமானது என புதின் தெரிவித்தார்.

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், மியாமி நகரில் இன்று உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து புதின் கூறுகையில், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மிகவும் அத்தியாவசியமானது என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் இது மிகவும் கடினமான பணி என்றும் தெரிவித்தார்.

சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அலாஸ்காவில் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பல்வேறு கட்டங்களாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story