ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்


ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
x

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 368வது நாளாக போர் நீடித்து வருகிறது.

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 368வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வர 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி முன் மொழிந்துள்ளார். அந்த நிபந்தனைகள் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுடன் உக்ரைன் அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு மத்தியில் ரஷியா - உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன்படி, ரஷியாவின் விமான நிலையங்கள், மின் நிலையங்களை குறிவைத்து உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

1 More update

Next Story