ரஷியாவுக்கு வீடியோகேம் உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை


ரஷியாவுக்கு வீடியோகேம் உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை
x
தினத்தந்தி 26 April 2025 5:15 AM IST (Updated: 26 April 2025 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்திருந்தது.

லண்டன்,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.

எனவே ரஷியாவுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், ஜாய் ஸ்டிக் போன்ற உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை விதித்துள்ளது. இதனை பயன்படுத்தி உக்ரைன் மீது திரும்ப திரும்ப டிரோன் தாக்குதல் நடத்த முடியும் என்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story