குண்டு வெடித்து பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி

பாகிஸ்தனில் தெக்ரிக் இ பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
லாகூர்,
பாகிஸ்தனில் தெக்ரிக் இ பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லை மாகாணமான கைபர் பக்துவாவில் இந்த பய்ங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் மாவட்டம் திரக் பகுதியில் பயங்கரவாத முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் தெக்ரிக் இ பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி யாசிம் என்கிற அப்துல்லா வெடிகுண்டு தயாரித்துள்ளார். அந்த வெடிகுண்டை டிரோனில் வைத்து பறக்கவுட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக யாசிம் நின்றுகொண்டிருந்த பகுதியில் வெடிகுண்டு விழுந்தது. இதனால், வெடிகுண்டு வெடித்து. இந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாதி யாசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.
Related Tags :
Next Story