இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலை நான்தான் தடுத்து நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவருகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார்.
அர்மேனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது. இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இன்று மற்றொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இருவரும் பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். அதை நான் நிறுத்தினேன். ஒரு அணுசக்தி மோதலுக்கு முன்னதாக அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர் என்று தெரிவித்தார். மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு - ருவாண்டா, தாய்லாந்து - கம்போடியா ஆகிய மோதல்களிலும் தனது அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசினார்.