வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்


வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்
x

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது.

இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில், வங்காளதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லாவிடம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை சுற்றிவளைக்க கிளர்ச்சியாளர்கள் திட்டமிடுவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story