கடும் நிதி நெருக்கடி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விற்பனைக்கு வருகிறது


கடும் நிதி நெருக்கடி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விற்பனைக்கு வருகிறது
x

பாகிஸ்தான் ஏர்லைன்சை கடந்த ஆண்டு விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதநிலையில், இச்சம்பவம் அம்பலம் ஆனது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஏர்லைன்சை கடந்த ஆண்டு விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. விலைக்கு வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க 4 உள்ளூர் நிறுவனங்கள் தகுதி பெற்றிருப்பதாக தனியார்மயமாக்கல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில், ஏலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story