உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி

சமீபத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் இது பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது.
காசா,
ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
நள்ளிரவு நேரம் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிர் இழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 16 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் இது பெரிய தாக்குதல் ஆகும். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறும் போது தாக்குதல் நடத்திய பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் போலீசார் உள்பட 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.