ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்கா தகவல்


ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்கா தகவல்
x

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாஷிங்டன்,

ரஷியா–உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது. போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். ரஷியா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். டிரம்ப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்nரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:“ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்தன. இது சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் விதிமுறைகள் மட்டுமல்ல; இது உக்ரைனின் நீண்டகால செழிப்புக்கான விதிமுறைகளைப் பற்றியது. இன்று நாம் அதைக் கட்டியெழுப்பினோம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story