பிரதமர் மோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு?


பிரதமர் மோடி இலங்கை பயணம்:  சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு?
x
தினத்தந்தி 4 April 2025 2:22 PM IST (Updated: 4 April 2025 4:57 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு,

பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்லவுள்ளார். பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு மோடி சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மீனவர்கள் பிரச்சினையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாகவும் இலங்கை அரசுடைமையாக்கப்பட்ட 74 இந்திய மீனவர்களின் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்ட படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்படை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி இலங்கை சென்று திரும்பியதும், படகுகளை மூழ்கடிக்கும் பணி முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story