இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம்

பெண்ணை கைது செய்தபோது எடுத்த வீடியோவை சமர்ப்பிக்க போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
லண்டன்,
இங்கிலாந்தில் கடந்த 2021-ம் ஆண்டு நாடின் பஸ்ஸார்ட்-குவாஷி என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அடுத்த நாளே அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கைது செய்தபோது போலீசார் தன்னை தாக்கியதாக கோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமர்ப்பிக்க நார்தாம்ப்டன்ஷயர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
4 ஆண்டுகள் ஆகியும் போலீசார் அந்த வீடியோவை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை அவமதித்த நார்தாம்ப்டன்ஷயர் போலீசாருக்கு சுமார் ரூ.58 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நார்தாம்ப்டன்ஷயர் போலீஸ் நிலைய தலைமை காவலர் இவான் பால்ஹாட்செட் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறி உள்ளது.






