தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...!


தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...!
x

ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கேப்டவுன்,

ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ஜோகனர்ஸ்பர்க் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை மாற்றம், எரிசக்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டிற்குப்பின் இந்தியா - பிரேசில் - தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் கூட்டு கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story