பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாத சீன அதிபர்

அமெரிக்காவுடன் பாக்., மிகவும் நெருக்கமாகி வருவது, சீன அதிபருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பீஜிங்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தநிலையில், சீனாவின் தியான் ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சீனாவின் நீண்ட கால நண்பனாக கருதப்பட்ட பாக்., பிரதமரை, சீன அதிபர் கண்டுகொள்ளாமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக அமெரிக்கா-வுடன் பாக்., மிகவும் நெருக்கமாகி வருவது, சீன அதிபருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதே இதற்கு காரணம் என பேசப்படுகிறது.
Related Tags :
Next Story