ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்தாக்குதல்: குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்தது
காபூல்,
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசாங்கம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதனை ஏற்காத பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. அதன் ஒருபகுதியாக தற்போது ஆப்கானிஸ்தானின் பாக்டிகா, குனார் உள்ளிட்ட 4 மாகாணங்களில் பாகிஸ்தான் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள ஒரு வீடு இடிந்து தரைமட்டமாகி 9 குழந்தைகள் உள்பட 10 பேர்பலியாகினர்.
Related Tags :
Next Story






