ஆபரேஷன் சிந்தூர்: ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாஸ்கோ,
ரஷிய கூட்டாட்சி கவுன்சிலின் வெளிநாட்டு விவகாரங்கள் குழு, அதன் துணைத் தலைவர் ஆண்ட்ரெய் டெனிஸோவின் தலைமையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசிடம் கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது. மேலும், பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவின் ரஷிய தூதர் வினய் குமார் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story