இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி


இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Nov 2025 12:00 PM IST (Updated: 28 Nov 2025 12:22 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டுள்ளது.

காட்மாண்டு,

உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. இதை அந்த நாட்டு நாடாளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது.

இதற்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

தற்போது இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு உள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story