மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி

Photo Credit: AP
கடந்த சில நாட்களாக மியான்மரில் கிளர்ச்சி படைக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது
யாங்கூன்,
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே ராணு வத்துக்கு எதிராக கிளர்ச்சி யாளர்கள் குழுக்கள் செயல் பட்டு வருகின்றன. அவர்கள் மீது ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மியான்மரில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சகாயிங் மாகாணத்தில் கிளர்ச்சி படைக்கும், ராணு வத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்த மாகாணத்தில் உள்ள லின் டா லு கிராமத்தில் ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியது.அப்போது அங்குள்ள புத்த மடத்தின் மீது குண்டு கள் வீசப்பட்டன. இதில் புத்த மடம் இடிந்து தரை மட்டமானது. இந்த தாக்கு தலில் புத்த மடத்தில் தங்கி இருந்த 4 குழந்தைகள் உள்பட, 23 பேர் பலியா னார்கள். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. லின் டாலு கிரா மத்தில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியது. அப்போது 150-க்கும் மேற்பட்டோர் புத்த மடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். அந்த புத்த மடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.