‘எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்; மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளோம்’ - எலான் மஸ்க்


‘எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்; மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளோம்’ - எலான் மஸ்க்
x
தினத்தந்தி 1 Dec 2025 10:02 AM IST (Updated: 1 Dec 2025 10:05 AM IST)
t-max-icont-min-icon

தனது மனைவி ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் மற்றும் குழந்தைகள் குறித்து பேசியுள்ளார். தனது மகனுக்கு நோபல் பரி பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர்.

அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என்று நினைக்கிறேன். எனக்கு அதுபற்றி முழு விவரங்கள் தெரியாது. ஆனால் ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர். அவர் கனடாவில் வளர்ந்தார்” என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்-ஷிவான் சிலிஸ் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story