மாயமான மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்திற்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி


மாயமான மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்திற்கு  தலா ரூ.3½ கோடி இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 10 Dec 2025 7:51 AM IST (Updated: 10 Dec 2025 7:57 AM IST)
t-max-icont-min-icon

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது

கோலாலம்பூர்,

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பீஜிங் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story