ஜமைக்கா அழகி மேடையில் தவறி விழுந்ததால் பரபரப்பு


ஜமைக்கா அழகி மேடையில் தவறி விழுந்ததால் பரபரப்பு
x

அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 74-வது பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற பெண்கள் பலரும் ஒய்யாரமாக நடந்து சென்றனர். அப்போது ஜமைக்காவை சேர்ந்த கபிரியெல்லே கென்ஹியும் அந்த மேடையில் ஒய்யாரமாக நடந்து சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி மேடையிலேயே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கபிரியெல்லே தவறி விழும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.

1 More update

Next Story