விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் உயிரிழப்பு


விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் உயிரிழப்பு
x

துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி சென்ற நிலையில், பங்கேற்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

அன்காரா,

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி தலைநகர் அங்கராவில் இருந்து புறபட்ட தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி சென்ற நிலையில், பங்கேற்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா இந்த தகவலை உறுதி செய்துள்ளார் தனது பேஸ்புக்கில் லிபிய பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பிய போது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சோகமான விபத்தில், ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story