காஷ்மீர் பிரச்சினை: 'அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்' - டிரம்ப் நம்பிக்கை


காஷ்மீர் பிரச்சினை: அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் - டிரம்ப் நம்பிக்கை
x

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இரு தரப்பு பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது;

"இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை அவர்கள் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story