சாரா மறைவுக்கு ஜோ பைடன் நிர்வாகமே பொறுப்பு; அமெரிக்க அரசு குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் இருந்து 2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின்னர், ரகுமானுல்லா அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சாரா பெக்ஸ்டிராம் (வயது 20) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மற்றொருவரான ஆண்ட்ரூ உல்ப் (வயது 24) தீவிர காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த தாக்குதலை நடத்தியவர் ரகுமானுல்லா லக்கன்வால் (வயது 29) என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. டிரம்ப் அரசின் உள்நாட்டு பாதுகாப்புக்கான உயரதிகாரியான கிறிஸ்டி நோயம், வெள்ளை மாளிகையில் நடந்த தாக்குதலில், சாரா கொல்லப்பட்டதற்கு ஜோ பைடன் அரசே பொறுப்பு என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடும், அதில் சாரா பலியானதற்கும் முழு பொறுப்பும் பைடனும், அவருடைய நிர்வாகமுமே காரணம். பைடன் அரசிலேயே இதுபோன்ற தனி நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடங்கியது என கூறியுள்ளார்.
ரகுமானுல்லா, ஆப்கானிஸ்தானில் இருந்து 2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின்னர், ஜோ பைடன் அரசின்போது, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றவர். ஆபரேசன் அல்லைஸ் வெல்கம் என்ற பெயரில் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களை வரவேற்கிறோம் என பைடன் அரசு கூறியது.






