துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி


துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி
x
தினத்தந்தி 21 Nov 2025 4:19 PM IST (Updated: 21 Nov 2025 5:37 PM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

இந்நிலையில், துபாய் விமான கண்காட்சியில் இன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story