நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்


நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
x

ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷியா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உக்ரைன் மீது டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “ரஷிய அதிபர் புதின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது வீடு மீது தாக்குதல் நடந்ததாக கூறினார். இதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன். ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு. இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல.

எனினும், சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதை மீறி தாக்குதல் நடந்திருந்தால், அது மிகவும் மோசமான விஷயம். தாக்குதல் நடந்ததா என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடிப்போம். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு சில மிகவும் சிக்கலான பிரச்சினைகள் உள்ளன,” என்றார்.

1 More update

Next Story