சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
சனா,
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்த போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவு அளித்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம், நிதி உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இதனிடையே, போரின் போது இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேல், சவுதி , அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உளவு பார்த்ததாக ஏமனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிஅயி சேர்ந்த பலரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மரண தண்டனை விதித்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோர்ட்டு 17 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. 17 பேரையும் சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






