ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு


ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
x

தீ விபத்தில் 79 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹாங்காங்,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில்சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தன.

இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடிருப்பின் பல்வேறு தளங்களுக்கு வேகமாக பரவியது. மேலும், கடுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மர கட்டமைப்புகள் மூலமாக தீ மளமளவென அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் ஏற்கனவே 94 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் 79 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story