ஹாங்காங்: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - பலி 65 ஆக உயர்வு; 300 பேர் மாயம்


ஹாங்காங்:  அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - பலி 65 ஆக உயர்வு; 300 பேர் மாயம்
x

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் என 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பீஜிங்,

சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது. இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் தீ பரவியது. எனவே தாய் போ நகர சாலை உடனடியாக மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்பில் வசித்து வந்த ஏறக்குறைய 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். 300 பேரை காணவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. 2 இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் ஒருவர் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story