ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டு இருக்கலாம்- இஸ்ரேல் பிரதமர் தகவல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பி–னருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்கார் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது சகோதரர் முகமது சின்வார் காசா பகுதி ஹமாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் தற்போது கொல்லப்பட்டு இருக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார். அவர் ஜெருசலேமில் நிருபர்களிடம் கூறியதா–வது:-
நாங்கள் பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை ஒழித்தோம். டெய்ப் ஹனியே, யஹ்யா சின்வார் ஆகியோரை ஒழித்தோம். இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரும் அனேகமாக கொல்லப்பட்டு இருக்கலாம். எங்கள்படைகள் காசாவில் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இந்த நடவடிக்கையின் முடிவில் அந்த பகுதி–கள் அனைத்தும் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார். ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டு இருக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு கூறி இருந்தாலும் ஹமாஸ்தரப்பு இதனை உறுதி செய்யவில்லை.