தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்


தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
x

உச்சிமாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கேப்டவுன்,

இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.

இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் இந்த உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உச்சிமாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம் , எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

1 More update

Next Story