பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜி20 உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கேப்டவுன்,
இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.
இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது,
அனைவரையும் உள்ளடக்க்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் நாகரீக மூலக்கூறுகள் முன்னேறி செல்ல பாதையாக உள்ளது. ஜி20 கூட்டமைப்பின்கீழ் உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். உலக முன்னேற்றத்தில் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி முக்கியமானது. ஜி-20 கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே திறன் வளர்ப்பு முன்னெடுப்புகள் நடைபெற்று ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜி20 கூட்டமைப்பு உலகளாவிய சுகாதார அமைப்பை உருவாக்க வேண்டும். இது பேரிடர், உலகளாவிய மருத்துவ அவசர நிலை காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் உதவ வழிவகுக்கும்.
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஜி20 கூட்டமைப்பு முன்வர வேண்டும்’ என்றார்.






