பாகிஸ்தான்: தொழிற்சாலையில் வெடி விபத்து - 16 பேர் பலி

வெடி விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரின் மாலிக்பூர் பகுதியில் பசை தயாரிப்பு தொழிற்சாலை (glue making factory) உள்ளது. இந்த தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்டோர் இன்று வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று பாயிலர் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 7 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த 16 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






