ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்; ஒருவர் பலி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 410வது நாளாக போர் நீடித்து வருகிறது.
கீவ்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 410வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷியாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
Related Tags :
Next Story






