மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்


மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்
x

15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு டிரம்ப் தூங்கினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக கடந்த ஜனவரியில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் பதவியேற்றார். இந்தநிலையில் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம், பொருளாதார நடவடிக்கை போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தூங்கி வழிந்தார். மார்க் ரூபியோ உள்ளிட்ட மந்திரிகள் டிரம்பின் நிர்வாகத்திறன் குறித்தும், போர் நிறுத்த நடவடிக்கைகளின் டிரம்பின் ராஜதந்திரம் குறித்தும் புகழ்ந்து தள்ளினர்.

இருப்பினும் அவற்றை ஏதுவும் காதில் வாங்காமல் டிரம்ப் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார். ஒருசில சமயம் 15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு தூங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிரம்புக்கு 79 வயதாவதால் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் இவ்வாறு தூங்கி வழிகிறார் எனவும் வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும், 3 மணிநேர மாரத்தான் கூட்டத்தை டிரம்ப் வெற்றிகரமாக கையாண்டதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story