இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி: நாளை அறிவிக்கிறார் டிரம்ப்


இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி: நாளை அறிவிக்கிறார் டிரம்ப்
x

இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சதவீத வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க விடுதலை நாளான நாளை (2-ம் தேதி) அறிவிக்க உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, பரஸ்பர வரிகளில் எந்த விலக்குகளும் இருக்காது. பரஸ்பர வரி கட்டண விவரத்தை அறிவிக்க டிரம்ப் தயராகி வருகிறார். இதனை செயல்படுத்துவதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்தார்.

மேலும் அவர் மற்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விவர பட்டியலையும் அவர் வெளியிடுவார் என்றார். மேலும் இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அமெரிக்காவின் 100 சதவீதம் வரி விதிப்பால் இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பல மடங்கு விலை அதிகரிக்க கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பரஸ்பர வரிகளை விதிக்கும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது, இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் பரஸ்பர வரிகளை கணிசமாக குறைப்பதாக கேள்விப்பட்டேன் என்று தெரிவித்தார்.


Next Story