இஸ்ரேலில் ஊழல் வழக்கில் மன்னிப்பு கோரிய பிரதமர்


இஸ்ரேலில் ஊழல் வழக்கில் மன்னிப்பு கோரிய பிரதமர்
x

இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் முதல் பிரதமர் பெஞ்சமின் ஆகும்.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு அவர் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் இவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்தநிலையில் பொதுமன்னிப்பு வழங்கி ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 111 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை அதிபர் இசாக் எர்சோக்கிடம் அவர் அளித்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களையும் அதிபர் மாளிகையின் சட்ட அலுவலகத்தில் அவர் சமர்ப்பித்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அதிபரிடம் மன்னிப்பு கோரிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் டெல் அவிவ் நகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story