பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று; டொனால்டு டிரம்ப்


பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று; டொனால்டு டிரம்ப்
x

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

வாஷிங்டன்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் மிகவும் நெருக்கமாக உள்ளேன். காஷ்மீருக்காக இரு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சண்டை நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையே 1 ஆயிரத்து 500 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. ஆனால், இந்த பிரச்சினையை ஏதேனும் ஒரு வழியில் இரு நாடுகளும் தீர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். இருநாட்டு தலைவர்களையும் எனக்கு தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறது.

1 More update

Next Story