கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி


கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி
x

கோப்புப்படம்

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர்.

ஏதென்ஸ்,

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல வானிலை இருந்தபோதிலும் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல விபத்துக்குள்ளான அந்த படகில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்களும் வெளியாகவில்லை.


Next Story