அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி


அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி
x

விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story