பிரேசிலை தாக்கிய சூறாவளி - 5 பேர் பலி


பிரேசிலை தாக்கிய சூறாவளி - 5 பேர் பலி
x

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.

பிரேசிலா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணத்தை நேற்று முன் தினம் இரவு சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டிடங்களில் மேற்கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரேசிலை தாக்கிய சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 432 பேர் காயமடைந்தனர். மீட்புப்பணிகள் போலீசார், தீயணைப்புத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story