மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா-பிசாவு நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது


மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா-பிசாவு நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது
x

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

கினியா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவு குடியரசில் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ செயல்பட்டு வந்தார். அங்கு கடந்த 23-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோவும், எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாசும் போட்டியிட்டனர். தேர்தல் தேர்வு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கினியா-பிசாவுவில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டது. அதிபர் மாளிகை மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் அவற்றை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அங்கு துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் வெளியானது.

நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ராணுவம் அறிவித்தது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அதிபர் உமரோ சிசோகோ எம்பலோவை ராணுவம் தடுப்பு காவலில் வைத்துள்ளது.

1 More update

Next Story