ஏஐ-யால் அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத வேலை இழப்பு ஏற்படும்: நிபுணர் எச்சரிக்கை

ஏஐ பயன்பாடு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
வாஷிங்டன்,
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. ஏஐ பயன்பாடு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில், ஏஐ பயன்பாட்டின் அதிகரிப்பால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகித தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான ரோமன் யம்போல்ஸ்கி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த வேலையிழப்புக்கு மாற்றாக ஆப்ஷன் பி எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் ஏஐ அமைப்புகளை வேகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் யம்போல்ஸ்கி, மென்பொருள் உருவாக்குபவர்கள் மற்றும் ப்ராம்ப்ட் இன்ஜினியர்கள் கூட இந்த ஆட்டோமேஷன் அலையில் இருந்து தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல முன்னணி மென்பொருள் பெருமளவில் பணி நீக்கத்தை தொடங்கியிருக்கும் நிலையில், அமெரிக்க நிபுணரின் இந்த எச்சரிக்கை பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் மத்தியிலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.