ஆஸ்திரேலியா: சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி

ஆஸ்திரேலியாவில் நடந்து சென்ற 8 மாத கர்ப்பிணி சொகுசு கார் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியான ஹார்ன்ஸ்பையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்விதா தரேஷ்வர் தனது கணவர் மற்றும் 3வயது மகனுடன் வசித்து வந்தார். மன்விதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் மன்விதா, கணவர்- மகனுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கார் நிறுத்துமிட நுழைவாயிலை கடக்கும்போது கார் வந்தது. அந்த கார் மீது பின்னால் சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் முன்னால் இருந்த கார் மன்விதா மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மன்விதாவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக காரை ஒட்டிய நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் கருவை இழக்கச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






