நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழை


நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழை
x

குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தூத்துக்குடி

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடியில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர், உடன்குடி, குலசை, காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகள், சேரன்மகாதேவி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடியை போன்று கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

1 More update

Next Story