தமிழகத்தில் 7 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது


தமிழகத்தில் 7 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது
x

கோப்புப்படம் 

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை

தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 104.36 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட்

பரங்கிப்பேட்டை - 100.76 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 100.58 டிகிரி பாரன்ஹீட்

சென்னை மீனம்பாக்கம் - 100.22 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு - 100.04 டிகிரி பாரன்ஹீட்

1 More update

Next Story