அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கூறியுள்ளார்.
சென்னை,
தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது.
இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன.அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.24,26-ல் சூறவாளிக்காற்று 35-45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






