11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு


11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மாலை 4 மணி வரை கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி மற்றும் திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story